பாடசாலை விடுமுறையில் மாற்றம்; டிசம்பர் 24 - ஜனவரி 02 வரை விடுமுறை

பாடசாலை விடுமுறையில் மாற்றம்; டிசம்பர் 24 - ஜனவரி 02 வரை விடுமுறை-School Holiday Fro Christmas Amended-December 24-January 03

கிறிஸ்மஸ் பண்டிகைக்காக வழங்கப்பட்ட பாடசாலை விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் 24 தொடக்கம் ஜனவரி 02, 2022 வரை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு டிசம்பர் 23, 2021 வியாழன் அன்று விடுமுறை அளிக்கப்பட்டு, ஜனவரி 03, 2022 திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அந்த வகையில் டிசம்பர் 24, 2021 முதல் ஜனவரி 02, 2022 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் அறிவிக்கப்பட்டதற்கு அமைய, கிறிஸ்மஸ் பண்டிகைக்காக டிசம்பர் 23 மற்றும் டிசம்பர் 24 ஆகிய இரு தினங்களுக்கு மாத்திரம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Fri, 12/03/2021 - 14:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை