கென்யாவில் திருமண பஸ் நீரில் மூழ்கி 23 பேர் பலி

கென்யாவில் திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த பஸ் வண்டி ஒன்று ஆற்று வெள்ளத்தில் மூழ்கி குறைந்து 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

கென்ய தலைநகர் நைரோபியில் இருந்து 200 கிலோமீற்றருக்கு அப்பாலிருக்கு என்சியு ஆறு பெருக்கெடுத்த நிலையில் நீரில் மூழ்கடிக்கப்பட்ட பாலத்தில் பஸ் வண்டியை வேகமாக செலுத்த முயன்றபோது அது நீரில் அடித்துச் செல்லப்படுவது அங்கு எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது.

தேவாலய பாடகர் குழு ஒன்றாலேயே இந்த பஸ் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் நால்வர் சிறுவர்கள் என்றும் குறைந்தது 12 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும் உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் அந்த பஸ்ஸில் எத்தனை பேர் இருந்தார்கள் என்று உறுதி செய்யப்படவில்லை.

கடந்த சனிக்கிழமை காலை இந்த விபத்து இடம்பெற்றதாக கிடுயி சரிட்டி நிகிலு ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கென்யாவின் பல பகுதிகளிலும் அண்மைக் காலத்தில் அசாதாரண மழை வீழ்ச்சி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mon, 12/06/2021 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை