2022 ஜனவரி முதல் குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ. 20?

தனியார் துறை சங்கம் பரிந்துரை

2022 ஜனவரி 01 ஆம் திகதி முதல் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 20 ரூபாவாக உயர்த்துமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் முன்மொழிந்துள்ளனர். இது தொடர்பான யோசனை அடுத்த வாரம் போக்குவரத்து அமைச்சு மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

நேற்றுக் காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 1.2 பில்லியன் ரூபாவை போக்குவரத்து அமைச்சு ஒதுக்கியுள்ளதுடன், கொவிட் -19 தொற்றுக்கு மத்தியில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு ஏன் நிவாரணம் வழங்கப்படவில்லையெனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Fri, 12/03/2021 - 12:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை