காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் பாரிய மோசடி; 200 கோவைகள் மாயம்

விசாரணைகள் இடம்பெறுவதாக காணி அமைச்சு தெரிவிப்பு

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேவேளை, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிலுள்ள 200 கோவைகள் காணாமற்போயுள்ளதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார் .

எவ்வாறெனினும் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விசேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ஜே.சீ.அலவத்துகொட எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், மேற்படி ஆணைக்குழுவில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருக்க வேண்டும். அதனாலேயே 200 கோவைகள் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். அவை இப்போது மாயமாகியுள்ளன என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இந்த மோசடிகள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Fri, 12/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை