சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 17 வருடங்கள் நிறைவு

சுனாமி பேரலையில் எம் உறவுகளை இழந்து இன்றுடன் 17 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 17 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி காலை கரையோரப் பிரதேசங்களில் சுனாமிப் பேரலை எம் உறவுகளை அள்ளிச் சென்றது.

இச்சம்பவத்தில் மரணித்த அனைவரையும் நினைவு கூரும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் இன்று 26 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் நடைபெறுகின்றன.

அத்துடன் சுனாமி அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூருவதற்காக இன்று (26) மு.ப. 9.25 - மு.ப. 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்றையநாளை அனர்த்த பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sun, 12/26/2021 - 08:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை