தேயிலை, ஆடை உற்பத்தி ஏற்றுமதி: WHO எச்சரிக்கை

இரு வருடங்களில் 10 பில். டொலர் வருமானம் பெற்றுக்கொள்வதே இலக்கு

அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு

ஆடைத் தொழில் துறை மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் உற்பத்தி ஏற்றுமதி மூலம் எதிர்வரும் இரண்டு வருடங்களில் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுக்கொள்ள முடியமென பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண (27) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டிற்கு ஆடைத் தொழில் உற்பத்தி ஏற்றுமதி மூலம் இவ்வருடத்தில் 4.8 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியமென குறிப்பிட்ட அமைச்சர் எதிர்வரும் இரண்டு வருடங்களில் ஆடைத் தொழில் உற்பத்தி ஏற்றுமதி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் துறை ஏற்றுமதி மூலம் 10 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் (27) பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு உள்ளிட்ட 04 அமைச்சுக்களின் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் ரமேஷ் பத்திரண இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்;

இந்த வருடம் நாட்டின் பொருளாதாரத் துறையில் மிகவும் முக்கியமான ஒரு வருடம் என்பது குறிப்பிடத்தக்கது.

இறப்பர் உற்பத்தி ஏற்றுமதி மூலம் இந்த வருடத்தில் ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

அதேபோன்று தேங்காய் ஏற்றுமதி மூலம் 900 மில்லியன் டொலரையும் கறுவா உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் மூலம் 450 மில்லியன் அமெரிக்கன் டொலர் வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியமென எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கிணங்க இந்த வருடத்தில் பெருந்தோட்ட கைத்தொழில் துறை மூலம் 3.8 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் இலக்காகும்.

அதே போன்று இந்த வருடத்தில் ஆடைத் தொழில் ஏற்றுமதி மூலம் 4.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொள்ளமுடியும் என்பதோடு எதிர்வரும் இரண்டு வருடங்களில் ஆடை தொழில்துறை உற்பத்தி ஏற்றுமதி மூலம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் அதே போன்று பெருந்தோட்ட கைத்தொழில் உற்பத்தி ஏற்றுமதி மூலம் மேலும் ஐந்து பில்லியன் டொலர்களையும் வருமான இலக்காகக் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் 2010ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை தேயிலை ஏற்றுமதி மூலம்1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இந்த வருடம் தேயிலை ஏற்றுமதி மூலமாக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு அதிக விலை காணப்படுகிறது. அந்த வகையில் இலங்கைத் தேயிலை 03 டொலராகவும் இந்தியாவின் தேயிலை இரண்டு டொலராகவும் கென்யாவின் தேயிலை 1.5 டொலராகவும் காணப்படுகிறது.

அந்த வகையில் தேயிலை உற்பத்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு கடன்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க தேயிலை நடுகைக்காக 4.75

வட்டியில் கடன் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Mon, 11/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை