uPVC கதவுகள், ஜன்னல்கள் மூலம் சூழலுக்கு உகந்த புத்தாக்க கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தும் Anton

uPVC கதவுகள், ஜன்னல்கள் மூலம் சூழலுக்கு உகந்த புத்தாக்க கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தும் Anton-Anton Environment Friendly uPVC Doors and Windows

70 ஆண்டுகளுக்கும் மேலாக, 100% இலங்கையர்களின் வீடுகளுக்கான தீர்வுகளின் உற்பத்தியாளரான Anton, உள்ளூர் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான வடிவமைப்புகள், சீரான புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரம் மூலம் சிறந்த வீட்டுத் தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாக உள்ளது.

St. Anthony's Industries Group Pvt நிறுவன பிரதான செயற்பாட்டு அதிகாரி லஹிரு ஜயசிங்க  தெரிவிக்கையில், "ஒரு பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில் நாம் எப்பொழுதும் எமது வாடிக்கையாளர்களுக்கு சூழல் நட்பு வாய்ந்த கட்டடங்களை உருவாக்க உதவுகிறோம். அத்துடன், தொடர்ச்சியான புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் அபிவிருத்திகளில் நாம் எமது கவனத்தை செலுத்தி வருகின்றோம்.” என்றார்.

Anton uPVC (Un-plasticized Polyvinyl Chloride) கதவுகள் மற்றும் ஜன்னல்கள் புத்தாக்க செயன்முறையின் முக்கிய விளைவுகளில் ஒன்றாகும்.

"இதில் uPVC தேர்ந்தெடுக்கப்படுவதன் காரணமாக, ​​மரத்தின் நுகர்வு குறைக்கப்படுகிறது. இது காடுகளின் பாதுகாப்பிற்கு வழிவகுக்கிறது. நாம் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு 6,000MT uPVC கதவுகள் மற்றும் ஜன்னல்கள் காரணமாக, 32,000 ஹெக்டயர் காடுகள் பாதுகாக்கப்படுகின்றன. இது சூழலுக்கு சிறந்த தீர்வாக இருப்பதன் காரணமாக, மேலதிக நன்மையுடன் கட்டுமானத்திற்கான சரியான தீர்வாகவும் அமைகின்றது. அலுமினியத்துடன் ஒப்பிடும்போது, ​​uPVC யும் வெற்றிடம் மூலமான சக்தி சேமிப்பை பேணுகின்றது. இது சக்திகளுக்கான செலவுகளை குறைப்பதன் மூலம் எமது விலைமதிப்பற்ற இயற்கை வளங்களைப் பாதுகாக்க உதவுகிறது. uPVC, புற ஊதாக்கதிர், தீ, கறையான்கள், துருப்பிடித்தல் ஆகியவற்றிலிருந்தான பாதுகாப்பையும் கொண்டுள்ளது. அத்துடன் குறைந்த பராமரிப்புடன் கூடிய ஒரு தயாரிப்பு என்பதன் காரணமாக, இது செலவைக் குறைக்கும் ஒரு நண்பனாகும்." என்றார்.

Anton uPVC தொகுதிகள் தொழில்துறையில் புதிய தரநிலை மற்றும் போக்கை அமைத்துள்ளன. தொழில்நுட்ப சிறப்பையும், அழகியல் வடிவமைப்பையும் கொண்டுள்ளதுடன், நிலையான மற்றும் ஒப்பிட முடியாத பொருத்தும் சேவைகளையும் வழங்குகிறது.

Wed, 11/10/2021 - 15:04


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை