SLFP யுடன் எமக்கு எந்தவித பிரச்சினையுமே கிடையாது

ஓரிருவர் செல்வது ஒரு பொருட்டே அல்ல

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் எம்முடன் இருக்கிறார்கள். ஓரிருவர் எம்மை விட்டு செல்வதால் எமக்குப் பிரச்சினை கிடையாதென இராஜாங்க அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்த குற்றச்சாட்டை முழுநாடும் கண்டது. சேதனப் பசளை தொடர்பான முடிவை சு.க அமைச்சர்கள் இருக்கையில் அவர்களின் உடன்பாட்டுடனே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டன. கூட்டுப்பொறுப்பு இருக்க வேண்டும். அவர் தெரிவித்த குற்றசாட்டை மறுக்கிறேன்.சேதனப் பசளை விவகாரத்தை தமது அரசியலுக்காக பயன்படுத்தி வருகிறார். விவசாயிகள் 50 வீத சேதனப் பசளைக்கு உடன்பட்டுள்ளனர் என்றார்.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இது தொடர்பில் கருத்துத் தெரிவித்ததோடு இந்தப் பிரச்சினையை மேலும் நீடித்துக் கொண்டு கொண்டு செல்லத் தேவையில்லை. யாராவது எம்.பியை பற்றி பேசுவதானால் அவர் சபையில் இருக்கும் போதே பேச வேண்டும் என சபை முதல்வர் கூறியிருந்தார். எனவே முன்னாள் ஜனாதிபதி சபையில் இருக்கும் வேளையில் இந்தப் விடயத்தை பேசியிருந்தால் அவருக்கும் பதில் வழங்கியிருக்கலாம். இந்த விடயத்தை தொடர்ந்தால் எமக்கும் பேச நேரிடுகிறது என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Sat, 11/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை