அமெரிக்க தூதுவராகிறார் மஹிந்த சமரசிங்க MP

-  விரைவில் MP பதவியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி அமெரிக்க தூதுவர் பொறுப்பை ஏற்க இருப்பதாக களுத்துறை மாவட்ட பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். 

அமெரிக்க தூதுவர் பொறுப்பை ஏற்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று பாராளுமன்றத்திலிருந்து விலகி அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறேன். அமெரிக்கா மீண்டும் மனித உரிமை அங்கத்துவத்தை பெற்றுள்ளது. எனது 10 வருட அனுபவத்தின் படி மனித உரிமை பேரவைவயின் தலைமைத்துவத்தை அமெரிக்கா பெறும். அமெரிக்காவுடனான தொடர்புகளை அதிகரிக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

வரவு செலவுத் திட்ட 03 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறையும் என்னை தெரிவு செய்தது தொடர்பில் களுத்துறை மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். 27 வருடங்கள் எம்.பியாக தொடர்ச்சியாக பணியாற்றினேன். பல தெரிவுக்குழுக்களுக்கு தலைமைத்துவம் வழங்கினேன்.

அரசியலிலிருந்து ஒதுங்க மாட்டேன். நாட்டுக்கு சேவையாற்றவே அமெரிக்கா செல்கிறேன். அமெரிக்கா சென்று வந்த பின்னர் மீண்டும் நாட்டுக்கு சேவையாற்றுவேன் என்றும் குறிப்பிட்டார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Wed, 11/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை