டயலொக் என்டர்பிரைஸ் Metro Texas Scramble கோல்ஃப் சுற்றுப்போட்டி கொழும்பில்

சமூக சேவை செயற்திட்டங்களுக்கு உதவுவதற்காக கொழும்பு பெருநகர ரோட்டரி கழகம் ஏற்பாடு செய்த தனித்துவமான கோல்ஃப் விளையாட்டுக்கான பிரதான அனுசரணையை டயலொக் என்டர்பிரைஸ் ஏற்றுள்ளது.

இலங்கையின் முதன்மையான தொலைதொடர்பாடல் சேவை வழங்குநரான டயலொக் அக்சிஆட்டா பிஎல்சியின் நிறுவன தீர்வுகள் பிரிவான டயலொக் என்டர்பிரைஸ் உடன் இணைந்து கொழும்பு பெருநகர ரோட்டரி கழகமானது,Dialog Enterprise Metro Texas Scramble கோல்ஃப் போட்டியை நாளை 13, சனிக்கிழமையன்று நடாத்தவுள்ளது. Scramble போட்டியானது அணிஅடிப்படையிலான போட்டி வடிவில் இடம்பெறவுள்ளது. ரோயல் கொழும்பு கோல்ஃப் கழகத்தின் உறுப்பினர்களுக்கான இப்போட்டியில் கோல்ஃப் வீரர்கள் காலை 7.00 மணிக்கும் மதியம் 12 மணிக்கும் களமிறங்கவுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் நான்கு அல்லது ஐந்து வீரர்கள் இடம்பெறவுள்ளனர்.

போட்டி முழுவதும் ஒவ்வொரு வீரரும் தங்கள் பந்தை அடிக்க வேண்டும். அணித் தலைவர்கள் தமது அணியிலிருந்து எந்த வீரராலும் அடிக்கப்பட்ட சிறந்த ஷாட்டைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு வீரருக்கும் அடுத்த ஷாட்களுக்கு அதே இடத்தைப் பயன்படுத்த வேண்டும். அனைத்து 18 துளைகளும் முடியும் வரை இந்த செயல்முறை தொடரும். இந்த போட்டி வீரர்களுக்கு சவாலான அதே சமயம் வேடிக்கையான வெளிப்புற அனுபவத்தை அளிக்கிறது. அனைத்து போட்டியாளர்களுக்கும், விருந்தினர்களுக்கும் தற்போதைய அனைத்து சுகாதார விதிமுறைகளும் நாள் முழுவதும் பின்பற்றப்பட்டு,கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என்பதற்கான உத்தரவாதமும் உள்ளது.

கொழும்பு பெருநகர ரோட்டரி கழகமானது கோல்ஃப் சுற்றுப்போட்டிகளை தனது வருடாந்த நிதி திரட்டும் நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்து வருகிறது. இது கொழும்பு பெருநகர ரோட்டரி கழகத்தால் ஆரம்பிக்கப்பட்டு,கண்காணிக்கப்பட்டு, நிர்வகிக்கப்படும் பல்வேறு சமூக மேம்பாட்டு செயற்திட்டங்களுக்கு நிதி சேகரிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படுகின்றது. அதேபோன்று டயலொக் என்டர்பிரைஸ் போன்ற இத்துடன் தொடர்புபட்ட தரப்பினரின் தொடர்ச்சியான மனமுவந்த ஆதரவு இலங்கையில் விளையாட்டின் முன்னேற்றத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தும் அதேநேரத்தில்,பின்தங்கிய மக்கள் மற்றும் உள்நாட்டு சமூகங்களை வளப்படுத்துகிறது.

கொழும்பு பெருநகர ரோட்டரி கழகத்தின் தலைவரான ஜெரால்ட் டி சேரம் கூறுகையில்,'எங்கள் பிரதான அனுசரணையாளரான டயலொக் என்டர்பிரைஸ் உடன் மீண்டும் ஒருமுறை கூட்டாளராக இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டு நிகழ்வில் முதல் முறையாக நாங்கள் அணி அடிப்படையிலான கோல்ஃப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளோம். கொழும்பு பெருநகர ரோட்டரி கழகம் ஏற்பாடு செய்த ஆறாவது கோல்ஃப் போட்டி இதுவாகும்.

எனினும், டயலொக் என்டர்பிரைஸ் மற்றும் எமது ஏனைய அனுசரணையாளர்கள் போன்ற எமது கூட்டாளர்களின் உறுதியான மற்றும் மனமுவந்த ஆதரவின்றி இவை எதுவும் சாத்தியமாகாது.

பின்தங்கியவர்களுக்கு வலுவூட்டுவதற்கும், வளப்படுத்துவதற்கும் உதவும் முயற்சிகளை நாங்கள் ஒன்றாக ஆதரிக்கவும், நிலைபெறச் செய்யவும் முடிந்ததுள்ளது,' என்று குறிப்பிட்டார்.

'எங்கள் கழகத்தின் இந்த ஆண்டு தொனிப்பொருள்' எதிர்காலத்தை கட்டியெழுப்புதல் - அனைத்தையும் தாண்டி வெற்றிகரமாக முன்செல்லல்' என்பது காணப்படுவதுடன், அதையே நாங்கள் செய்யவும் விரும்புகிறோம். மக்கள் ஏனையவர்களை நம்பியிருப்பதிலிருந்து சொந்தக்காலில் நிற்பதற்கான வலிமையையும் திறனையும் அவர்களுக்கு வழங்குவதே எங்கள் பணி என்று நாங்கள் நம்புகிறோம்.

Fri, 11/12/2021 - 09:48


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை