GSP+ சலுகையை தற்போதைய சூழலில் நிறுத்துவது நியாயமல்ல

EU வின் நிபந்தனைகளை நிறைவேற்ற திட்டம்

ஜி.எஸ்.பி சலுகையை நிறுத்துவது தற்போதைய நிலையில் நியாயமானதல்ல எனவும் ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை நிறைவேற்ற முழுமையான திட்டமொன்றை செயற்படுத்தி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஐரோப்பிய தூதுவரை இவ்வாரம் சந்திக்க இருக்கிறேன். இது தொடர்பில் பிரச்சினை வராதென முழுமையாக நம்புகிறேன்.தேவையான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதெனவும் அவர் தெரிவித்தார்.

வரவு-செலவுத் திட்ட விவாதத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது,..

நாட்டுக்கு முதலீடு பெற வாய்ப்புள்ளது. பிரிட்டன் மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு சென்றேன். பாரிய முன்னேற்றத்தை பங்களாதேஷ் பெற்று வருகிறது. முதலீடுகள் தானாக வராது. அதற்கு ஊக்குவிப்பு வழங்க வேண்டும். எமது நாட்டின் அமைவிடம், ஸ்கொட்லன்ட் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்ற போது கொவிட்19 கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை தொடர்பில் சகல நாடுகளும் பாராட்டுத் தெரிவித்தன. போட்டி உலகில் வாழும் நிலையில் ஊக்குவிப்பின்றி முதலீடுகளை பெற முடியாது.​ெ

சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும். கடற்கரையில் தங்கிச் செல்ல மாத்திரம் சுற்றுலா பயணிகள் வருவதில்லை. மருத்துவ நோக்கிலும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஜி.எஸ்.பி சலுகை தொடர்பில் ஆராய ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட குழு அண்மையில் இங்கு வந்தது. என்னுடன் விவரமாக ஆராய்ந்தனர்.இந்த சலுகை அன்பளிப்பல்ல. அதற்கு சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பில் ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்திய போது நாம் இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற முழுமையான திட்டமொன்றை செயற்படுத்தி வருகிறோம்.

அதன் முன்னேற்றம் தொடர்பில் விளக்கினோம்.எதிர்கால திட்டங்களையும் முன்வைத்தோம்.இந்த சலுகையை நிறுத்தவதால் இலங்கை அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படாது.சகல மக்களுக்கும் தான் பாதிப்பு ஏற்படும்.ஆடைத் தொழிற்சாலைகளில் 95 வீதம் பெண்களே பணியாற்றுகின்றனர்.ஜி.எஸ்.பி சலுகை ஊடாகவே எமது மீன் வளம் அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.ஜி.எஸ்.பி சலுகையை நிறுத்துவது தற்போதைய நிலையில் நியாயமானதல்ல என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம்

 

Sat, 11/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை