யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை-Inclement Weather, School Holiday, School Closed, Jaffna

- 24 மணித்தியாலங்களில் 200mm மழை பதிவு

யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு இன்று (09) விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க. மகேசன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் கனமழை பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் அறிக்கையிட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் பெரும் பகுதி வெள்ளப் பாதிப்புக்கு உட்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுகிறது.

மாகாண ஆளுநருடன் ஆலோசித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்தார்.

(யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன்)

அனர்த்த முகாமைத்துவ நிலைய அறிக்கை

Tue, 11/09/2021 - 07:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை