இ.தொ.கா தொடர்ந்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டிராது

- JEDP தோட்டங்களில் தொழில் புரிவோருக்கு சம்பள இழுத்தடிப்பு

ஜே.ஈ.டி.பி தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான அவர்களின் கொழுந்து பறித்த சம்பளத்தை அக்கம்பனி இன்னும் வழங்காமல் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதனை ஒருபோது ஏற்றுக்கொள்ளாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு பிரதம தபாலகத்தின் பின்தங்கிய பிரதேச அபிவிருத்தி அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று (14) நடைபெற்றது.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:-

குறிப்பாக ஜே.ஈ.டி.பி கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் தோட்டங்களை கொண்டுள்ள நிலையில் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை இன்னும் வழங்கவில்லை. குறிப்பாக ஒவ்வொரு 10ம் திகதியும் சம்பளம் வழங்கப்பட வேண்டும். நான்கு நாட்கள் கடந்தும் இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை.

எனவே ஜே.ஈ.டி.பியின் தலைவர், நிர்வாக இயக்குநர் உட்பட அனைவரும் ராஜினாமச் செய்ய வேண்டும். இதற்கு பதிலாக புதிய நிர்வாகத்தினர் தெரிவு செய்யப்பட்டு தோட்டங்கள் இயங்க வேண்டும்.

தனியாருக்கு காணி வழங்குவதில் காட்டும் ஆர்வம் தொழிலாளர்கள் விடயத்தில் காட்டப்படவில்லை. காலங்காலமாக ஈ.பிஎப்,ஈரி.எப் போன்றவற்றை கட்டாமல் சம்பளத்தை மட்டும் வழங்கி வந்தவர்கள் இன்று அந்த சம்பளத்தையே வழங்க இழுத்தடிப்புச் செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தை விற்றே தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கி வந்தவர்கள் சம்பளத்தை வழங்காமல் இருப்பதையிட்டு அராங்கம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.தோழிலாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வாதாரம் இன்றைய சூழ்நிலையில் மிகவும் கஷ்டமாக இருக்கின்றது.

இந்த சம்பளத்திலேயே அவர்களின் குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து வாழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்காக கொண்டு வருகின்ற நல்ல வேலைத்திட்டங்கள் கூட இவர்களின் செயற்பாடுகளினால் அரசாங்கத்தின் மீது மகக்கள் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும். எனவே அரசாங்கம் உடனடியாக ஜே.ஈ.டீ.பி மீது நடவடிக்கை எடுத்து புதிய நிர்வாகத்தை ஏற்படுத்தி, அப்புதிய நிர்வாகம் தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் சிறப்பாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், 10ம் திகதி என்றால் 9ம் திகதியே சம்பளம் வங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.எனவே தொழிலாளர்களின் நலன் கருதி ஜே.ஈ.டி.பி பதவி விலக வேண்டும் இல்லையெனின் நாங்கள் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்பதை தெரிவிக்கின்றேன் என தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை தினகரன் நிருபர்

Mon, 11/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை