வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்

குத்துவிளக்கேற்றி பைடன் தம்பதி வாழ்த்து

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் குத்து விளக்கேற்றி தீபாவளியைக் கொண்டாடினார்.

பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்துக்களும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய வேளையில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் அமெரிக்காவில் அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் தன் மனைவியுடன் வெள்ளை மாளிகையில் குத்து விளக்கேற்றி தன்னுடைய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் அவர் , இருளிலிருந்து அறிவு , ஞானம் , உண்மை உள்ளதைத் தான் தீபாவளி நமக்கு நினைவுப்படுத்துகிறது. அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

 

Sat, 11/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை