நாவலர் கலாசார மண்டப புனரமைப்பு; யாழ் மாநகரசபையில் கலந்துரையாடல்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் செயற்றிட்டங்களில் ஒன்றான நாவலர் கலாசார மண்டபத்தைப் புனரமைத்தலும் நாவலர் பெருமானின் பணிகளை அதன் மூலமாக முன்னெடுத்தல் என்ற செயற்றிட்டத்துக்கமைவாக இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்குச் சொந்தமான நாவலர் கலாசார மண்டபத்தில் நாவலர் பணிகளை யாழ். மாநகர சபையோடு இணைந்து செயற்படுத்தும் வகையில் சுமுகமான முறையிலே சந்திப்பு யாழ். மாநகர சபையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பு நிகழ்வில், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரன், நாவலர் கலாசார மண்டபம் இந்து சமய, கலாசார அலுவல்கள் தினைக்கத்திற்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்களை யாழ்.மாநகர சபை முதல்வர் வி. மணிவண்ணனிடம் கையளித்தார். பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீதநாத் காசிலிங்கம், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ இராமச்சந்திரக்குருக்கள் பாபு சர்மா, யாழ்.மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவர், விடைக்கொடிச் செல்வர் திரு. சின்னத்துரை தனபாலா ஆகியோரும் கலந்தகொண்டனர்.. நாவலரின் பணிகளை நாவலர் கலாசார மண்டபத்தில் இரு தரப்பினரும் இணைந்து முன்னெடுப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடலும் நடைபெற்றது.

 

Mon, 11/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை