இந்தியாவின் ஒத்துழைப்புடன் வட மாகாணத்தில் அபிவிருத்தி

வடக்கு ஆளுநர் - இந்திய தூதுவர் பேச்சுவார்த்தை

வட மாகாணத்தில் இந்தியாவின் அபிவிருத்தி ஒத்துழைப்பு வாய்ப்புகள் தொடர்பில், வடமாகாண புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கும், இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனுக்குமிடையே கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணை உயர்ஸ்தானிகரகம், அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜீவன் தியாகராஜாவுக்கு, இந்தியத் துணை உயர்ஸ்தானிகர் இதன்போது வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன், வட மாகாணத்தில் இந்தியத் திட்டங்கள் மற்றும் இந்தியாவின் அபிவிருத்தி ஒத்துழைப்பு வாய்ப்புகள், குறிப்பாக கல்வி, சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பம், விவசாய உற்பத்திகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இந்திய துணை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Thu, 11/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை