எம்.பிமாரின் ஓய்வூதிய காலத்தை நிர்ணயிக்க உதவிய இளம் எம்.பிக்கள்

- நன்றி தெரிவித்து பாராட்டினார் பசில்

ஓய்வூதியம் பெறுவதற்கு பத்து வருடங்கள் சேவையாற்றுமாறு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த முன்மொழிவு அரசாங்கத்தின் இளம் உறுப்பினர் ஒருவரினால் முன்வைக்கப்பட்டதாகவும் அந்த பாராளுமன்ற உறுப்பினரை தாம் மதிப்பதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆளும் கட்சி உறுப்பினர்களில் நாற்பது வீதமானவர்கள் இளம் உறுப்பினர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் புதிய சட்டத்தின் மூலம் சீர்செய்யப்பட வேண்டும் எனவும், ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Mon, 11/15/2021 - 07:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை