விண்கல்லுடன் மோதும் விண்கல பயணம் ஆரம்பம்

விண்கல் ஒன்றின் மீது மோதவிடுவதற்காக விண்கலம் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா நேற்று விண்ணில் செலுத்தியது. பூமியில் இருக்கும் உயிர்களை அழிக்கக் கூடிய இராட்சத விண்கல்லை தடுக்கும் ஆய்வு ஒன்றாகவே இந்த விண்கலம் பயணித்துள்ளது.

டார்ட் என்ற இந்த விண்கலம் கலிபோர்னியாவில் உள்ள வன்டன்பேர்க் விண்வெளித் தளத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட் மூலமாக நேற்று விண்ணில் ஏவப்பட்டது.

இந்த விண்கலம் டைமோர்போஸ் எனும் விண்கல்லுடன் மோதி, அதன் வேகமும் பாதையும் எந்த அளவு மாற்றப்பட முடியும் என்பதைச் சோதிக்கும்.

இந்தக் குறிப்பிட்ட விண்கல் பூமிக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்காது என்ற போதும், பூமியைக் காப்பாற்றுவது எப்படி என்று கற்கும் நோக்கத்துடன் ஒரு விண்கல்லை திசைமாற்றும் முதல் முயற்சியாக இது உள்ளது.

இந்த விண்கலம் 6.8 மில்லியன் மைல்கள் பயணித்து 2022 இன் மூன்றாவது காலாண்டில் குறித்த விண்கல்லுடன் மணிக்கு 24,000 கிலோமீற்றர் வேகத்தில் மோதவுள்ளது.

Thu, 11/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை