இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிறு விபத்து

ராகமையில் சம்பவம்: எவருக்கும் காயமில்லை

ராகமை - – பெரலந்த ரயில் நிலையங்களுக்கு இடையில் இரு ரயில்கள் நேற்று ஒன்றுடன் ஒன்று மோதி சிறு விபத்துக்குள்ளாகியதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.

இதேவேளை தெமட்டகொடை மற்றும் பல்லேவெல ரயில் நிலையங்களுக்கு இடையில் சமிக்ஞை கோளாறு காரணமாக நேற்று காலை பிரதான பாதையில் செல்லும் ரயில்கள் தாமதமாகின.

எவ்வாறாயினும், இந்த விபத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என ராகம புகையிரத நிலைய கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்தது.

புத்தளத்திலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த புகையிரதத்தை, அதன் பின்னால் வந்த மற்றுமொரு புகையிரத எஞ்சின் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், இந்த விபத்தில் எவருக்கும் உயிர் சேதங்களோ, காயங்களோ ஏற்படவில்லை எனவும் இது பாரிய விபத்து அல்லவெனவும் ராகம புகையிரத நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததன் காரணமாக ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில், 6 மாத காலப்பகுதியின் பின்னர் நேற்று (01) முதல் நாடு முழுவதும் மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. அதே நேரத்தில் நெடுந்தூர ரயில்கள் நவம்பர் 5 ஆம் திகதி முதல் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tue, 11/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை