நாட்டிலுள்ள அனைவருக்கும் பீசிஆர் பரிசோதனை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

ஒமிக்ரன் வைரஸ் நாட்டுக்குள் நுழையக்கூடிய சாத்தியம் உள்ளதால் நாட்டிலுள்ள அனைவருக்கும் பீசிஆர் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வெளிநாட்டில் இருந்து தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களும் கூட இத்தகைய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்களா?

எனவும் அவர் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் விசேட அறிக்கையொன்றை விடுத்தார். தடுப்பூசி போடப்பட்டவர்களும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளதாகவும், இந்த நேரத்தில் மரபணு பரிசோதனை மற்றும் கண்காணிப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

உலக சுகாதார ஸ்தாபனம் ஒமிக்ரன் வைரஸை கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு வைரஸாக அடையாளம் கண்டுள்ளது என்றும், அல்பா, பீட்டா காமா மற்றும் டெல்டா வகைகள் குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்டிருப்பதால்,லாம்ப்டா, எப்சிலான் மற்றும் மு போன்ற மாறுபாடுகளுக்கு வழங்காத கவனம் இதற்குச் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். .

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Tue, 11/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை