நாட்டில் நிலவும் சில பிரதான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

நாட்டில் நிலவும் முக்கிய சில பிரச்சினைகளுக்கு மிக விரைவில் தீர்வு பெற்றுக் கொள்ள முடியும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பண்டாரகம பகுதியில் நடைபெற்ற   நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அது தொடர்பில் தெரிவித்த நிதியமைச்சர், அரசாங்கம் அதற்குரிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பண்டாரகம பிரதேசத்தில் மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் முதலாவது தனியார் தொழிற்சாலையான பெல்க்ஸி கெயார் தொழிற்சாலையை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பிரச்சினைக்குள்ளாகியுள்ள வெளிநாட்டு செலாவணியை பெற்றுக் கொள்ளும் நிறுவனங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 11/19/2021 - 12:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை