இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவன நடவடிக்கைக் குழு நியமனம்

தினகரன் பிரதம ஆசிரியர் உள்ளிட்டட 13பேர் தெரிவு

ஊடக கல்வித்துறையில் சான்றிதழ் பாடநெறி தொடக்கம் முதுகலை பட்டம் வரையான கல்வியை கற்பதற்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் ஊடக உயர்கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனமாக இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் ஒன்றை நிறுவுவதற்காக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும சமர்ப்பித்த யோசனைக்கு கடந்த அக்டோபர் 5ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

அந்த யோசனையை செயல்படுத்தும் நோக்கில் ஊடக அமைச்சு இலங்கை பட்டய ஊடக நிறுவனம் ஒன்றை அமைக்க பொறுப்பு வாய்ந்த நடவடிக்கை குழுவொன்றை நியமித்துள்ளது. சர்வதேச தரத்துக்கு அமைய தரமான ஊடகக் கலாசாரத்தை உருவாக்குவதும் மற்றும் உயர் தொழில் நிபுணத்துவதுடன் கூடிய ஊடகவியலாளர்களை உருவாக்குவதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும். 

அக்குழுவின் அங்கத்தவர்களாக ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பி. விஜயவீர, ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் எச். ஹேவகே, அரசாங்க தகவல் திணைக்கள மேலதிகப் பணிப்பாளர் மிலிந்த ராஜபக்ச, ஊடக அமைச்சின் சட்ட அதிகாரி யுரேகா வேலாரத்ன, களனி பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி விஜயானந்த ரூபசிங்க, இலங்கை திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி மதுஷானி கலகெதர, இலங்கை மன்ற சிரேஷ்ட விரிவுரையாளர்  கலாநிதி விஜயந்த உக்வத்த, முன்னாள் அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ரங்க ஜயசூரிய, இலங்கை இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்க தலைவர் அசங்ச ஜெயசூரிய, இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் பேரவை பிரதிச் செயலாளர் மொஹான் லால் பியதாச, தினகரன் மற்றும் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் மற்றும் விஞ்ஞானத்துறை எழுத்தாளர் நாலக்க ஜே. குணவர்தன மற்றும் குழுவின் செயலாளர் டபிள்யூ .பி. செவ்வந்தி(பணிப்பாளர் . அபிவிருத்தி) ஆகியோர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

 

Tue, 11/30/2021 - 10:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை