சீன இராணுவ தளம்: தஜிகிஸ்தான் மறுப்பு

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் சீனா சிறப்பு இராணுவத் தளம் ஒன்றை திட்டமிட்டிருப்பதாக வெளியான செய்தியை அந்த நாடு நிராகரித்துள்ளது. சீனாவும் அங்கு இராணுவத் தளம் அமைக்கும் செய்தியை மறுத்துள்ளது.

தஜிகிஸ்தானின் கிழக்கு பக்கமாக சீனா எந்த ஒரு இராணுவத் தளத்தையும் அமைக்க திட்டம் இல்லை என்று தஜிகிஸ்தான் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனினும் ஆப்கானுடான தஜிகிஸ்தான் எல்லையில் ‘இராணுவத் திட்டம்’ தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே இணக்கம் எட்டப்பட்டதாக சீனா ஒப்புக்கொண்டது.

எல்லையில் 8.6 மில்லியன் டொலர் இராணுவத் தளம் ஒன்றை சீனா அமைக்கவுள்ளதாக தஜிகிஸ்தான் முன்னதாக கூறியிருந்தது.

தஜிகிஸ்தானின் குளோப் பகுதியில் சீனாவின் இராணுவத் தளம் ஒன்று ஏற்கனவே இயங்கி வருகிறது. அது 2016 ஆம் ஆண்டு சீன அரசினால் அமைக்கப்பட்டது.

 

Tue, 11/02/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை