இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்

ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் ரி 20 உலக கிண்ணத்துடன் முடிவடையும் நிலையில், ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் ரவி சாஸ்திரி. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ரி 20 உலக கிண்ணத்துடன் ரவி சாஸ்திரியின் பதவிக்கலாம் முடிவடைகிறது. இதனால் புதிய தலைமை பயிற்சியாளரை தெரிவு செய்வதற்கான விண்ணப்பத்தை வெளியிட்டு, விருப்பம் உள்ளவர்கள் பூர்த்தி செய்து அனுப்பலாம் என பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது.

ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். அவரைத் தவிர யாரும் விண்ணப்பம் செய்தாத நிலையில், தற்போது ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமனம் குறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய கௌரவம். அந்த பணியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

ரவி சாஸ்திரியின் தலைமையின் கீழ் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. அணியுடன் பணிபுரிந்து முன்னோக்கி எடுத்துக் செல்வேன் என்று நம்புகிறேன்’’ என்றார்.

Fri, 11/05/2021 - 10:42


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை