மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக எதிரணி பொய்ப் பிரசாரம்

-தடுப்பூசி ஏற்றிக் கொண்டு மீண்டும் செல்வதற்கு வந்தவர்களே அவர்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயற்பாடுகள் காரணமாகத்தான் மக்கள் நாட்டை விட்டு வெளிநாடு செல்வதாக எதிரணி குற்றஞ்சாட்டியதில் எந்த உண்மையும் கிடையாது. அவரால் தான் வெளிநாடுகளில் பணிபுரிந்த மக்கள் நாட்டுக்கு வந்தனர். தடுப்பு மருந்துகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்ல வந்தவர்களே அவர்களென அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். ஆயிரக்கணக்கான மக்கள் வேறு நாடுகளில் இறந்த போது, அந்த நாடுகளில் வாழும் எமது மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்து அந்த நாடுகளை விட்டு வெளியேறி இங்கு வந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார். வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் தொடர்புள்ள  மக நெகும நிர்மாண இயந்திர நிறுவனத்தினால் கட்டுகம்பொல ஆடிகமவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அஸ்போல்ட் முழுமையான கலவை இயந்திர தொழிற்சாலையின் உற்பத்தி பணிகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் தலைமையில் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உரையாற்றுகையில்,

கடந்த அரசாங்கம் இன்று இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். பலப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை முன்னைய அரசாங்கம் நாசமாக்கியது. நாட்டை அபிவிருத்தி செய்ய போதுமான பணம் இருந்தது. ஆனால் எங்களிடம் டொலர்கள் இல்லை, அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எமது நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தந்த சுமார் ஒன்றரை இலட்சம் அப்பாவிகள் மீண்டும் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டனர். அவர்களை வாக்களிக்க வரவழைத்ததாக எம்மீது குற்றம் சுமத்தினர். அவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான தடுப்பூசியை ஏற்றினோம். சில நாடுகளுக்கு நுழைவதற்கு ஒரே ஒரு தடுப்பூசியை ஏற்றினால் மாத்திரமே அனுமதி வழங்கப்படுகிறது. நாங்கள் அதனை வழங்கினோம். வந்தவர்கள் கடவுச்சீட்டை தயார் செய்து கொண்டு வெளிநாடு சென்று விடுகின்றனர். ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காரணமாகவே மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்ற கருத்தை எதிர்க்கட்சிகள் பரப்பின.

எமது கட்சி மாநாட்டில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதை பற்றி ஆராயுமாறு சொன்னார். நாம் தேடிப்பார்த்த போது தடுப்பு மருந்துகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்ல வந்தவர்களே அவர்கள் என்பது தெரிந்தது. இலங்கையை விட்டு வெளியேற வேண்டுமானால் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல வேண்டும். ஆனால் இவர்கள் ஐரோப்பாவுக்குச் செல்லும் மக்கள் அல்ல. கோட்டாபய ராஜபக்ஷவின் காரணமாகவே அவர் நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறப்படுகிறது. ஆனால் அவரால் தான் அந்த மக்கள் நாட்டிற்கு வந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வேறு நாடுகளில் இறந்த போது, அந்த நாடுகளில் வாழும் எமது மக்கள் கோட்டாபய ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்து அந்த நாடுகளை விட்டு வெளியேறி இங்கு வந்தனர். வெளிநாடு செல்லும் மனிதர்களை நாம் வணங்க வேண்டும். அவர்களிடமிருந்து வரும்டொலர்களால்தான் இந்த நாட்டிற்கு எண்ணெய் கூட இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த மக்களைத் தான் நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் என்று அவமானப்படுத்தியுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

Mon, 11/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை