பாகிஸ்தானில் அதிகரித்துவரும் ஊடகவியலாளர் மீதான அடக்குமுறை

- 23 ஊடகவியலாளர் கைது; தடுத்து வைப்பு

பாகிஸ்தானில் நடைமுறையில் உள்ள இணைய வெளிக்குற்றங்கள் தொடர்பான சட்டம் பாக். ஊடகவியலாளர்களை அடக்கி ஒடுக்குவதற்கு பயன்படுவதாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 23 ஊடகவிலாளர்கள் கைதாகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் பிரீடொம் நெட்வேர்க் என்ற பாகிஸ்தான் ஊடக கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த 23 ஊடகவியலாளர்களில் 13 பேருக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஒன்பது ஊடகவியலாளர்கள் கைதாகி இருப்பதாகவும் அறுவர் இரண்டு மாத காவலின் பின்னர பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த அமைப்பு மேலும் தெரிவித்திருக்கிறது.

ஆயுதப் படையினரின் கௌரவத்துக்குப் பங்கம் விளைவித்தமை, நீதித்துறையின் கெரவத்துக்கும் ஊறுவிளைவித்தமை என்பது இந்த ஊடகவியலாளர்களின் மீதான குற்றச்சாட்டுகளில் சிலவாகும். ஒருவர் மீது சதி முயற்சிக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 24 மணித்தியாலமும் செயல்படும் தொலைக்காடசிகள், பல செய்திப்பத்திரிகைகள், இணையதளங்கள், ஊடகவியலாளர்களினால் இயக்கப்படும் ‘யூடியூப்’ பக்கங்கள் என்பன செயற்பாட்டில் உள்ளன. அந்நாட்டின் ஆட்சியிலும் அரசியலிலும் அந்நாட்டு இராணுவம் தலையீடு செய்வது போன்ற விடயங்கள் தொடர்பில் செய்திகள், கட்டுரைகள் வெளியிட வேண்டாம் என அதிகாரிகளினால் கேட்கப்படுவதாக மனித உரிமை குழுக்களும் ஊடகவியலாளர்களும் தெரிவித்து வருகின்னர்.

இவ்வாறு விடுக்கப்படும் எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தும் செய்தி தொலைக்காட்சி ஊடகங்களின் சமிக்ஙைகளில் இடையூறு செய்தல், பத்திரிகைகளின் விநியோகத்தில் ஊறுவிளைவித்தல் மற்றும் இராணுவத்தை விமர்சிக்கும் செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்களை கடத்திச் செல்லல் என்பன இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணைய வெளிக்குற்றங்கள் தொடர்பான சட்டத்தை பாக். ஊடகவியலாளர்களை அடக்கி வைக்கும் ஒரு உத்தியாக அரசாங்கம் பயன்படுத்துவதாக 2019ம் ஆண்டு அல்ஜஸீரா மேற்கொண்ட ஒரு ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாகிஸ்தானின் 74 வருட வரலாற்றில் ஏறக்குறைய அரைவாசி காலப் பகுதி இராணுவ அட்சிக்கு உட்பட்டிருந்தது என்பதோடு அரசாங்கத்தின் மீதான இராணுவத்தின் செல்வாக்கு இம்ரான் கான் பதவிக்கு வந்த பின்னர் வெகுவாகக் அதிகரித்துள்ளதாக எல்லைகளைத் தாண்டிய ஊடகவியலாளர்கள் என்ற சர்வதேச அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Mon, 11/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை