கொவிட் பரவல் மீண்டும் தலைதூக்கும் அபாயம்

விழிப்பாக இருக்க சுகாதார பிரிவு கோரல்

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், கொவிட்19 பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாகப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். குறிப்பாகப் பொதுப் போக்குவரத்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளின்போது சுகாதார வழிகாட்டல்களுக்கு முன்னுரிமையளித்து அவற்றைப் பின்பற்ற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அனைத்து மருத்துவமனைகளிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களிலும் என்டிஜன் பரிசோதனை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஒன்றுகூடல்கள், நிறுவனங்களில் நடைபெறும் கூட்டங்கள் போன்ற செயற்பாடுகளினால் கொவிட்19 பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால், அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு விசேட வைத்தியர் கோரியுள்ளார்.

அத்துடன், பரிந்துரைகள் கிடைத்ததன் பின் சைனோபாம் மூன்றாவது தடுப்பூசியைச் செலுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Thu, 11/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை