திருகோணமலை அலெக்ஸ் அணி சம்பியன்

சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கோடு திருகோணமலை எஹெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்று கடந்த (14) திருகோணமலை மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

10 அணிகள் பங்குபற்றியிருந்த இந்த தொடரின், இறுதிப்போட்டிக்கு லிவர்பூல் அணியும் அலெக்ஸ் அணியும் தகுதி பெற்றிருந்தன.

முதலில் துடுப்பெடுத்தாடிய லிவர்பூல் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து, 25 ஓட்டங்களைப் பெற்றது.

26 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அலெக்ஸ் அணியினர் மூன்று ஓவர் 4 பந்துகளில் வெற்றி இலக்கை அடைந்தனர்.

இப் போட்டித் தொடரை திருகோணமலை யுனைட்டட் கிங்ஸ் விளையாட்டுக்கழகம் ஒழுங்குபடுத்தி நெறிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிண்ணியா மத்திய நிருபர்

Fri, 11/26/2021 - 12:42


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை