கொவிட் நிதியத்துக்கு நிதியுதவி

கொவிட்19 நிதியத்துக்கு அரச ஈட்டு, முதலீட்டு வங்கி 05மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது. 

அரச ஈட்டு, முதலீட்டு வங்கியினால், “செய்கடமை" ( இட்டுகம) - COVID -19சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்துக்கே, இந் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கான காசோலை, அரச ஈட்டு, முதலீட்டு வங்கியின் பதில் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான லுஷாந்த ரணசிங்கவினால், ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஸ்வர பண்டாரவிடமிருந்து (26) கையளிக்கப்பட்டது.

அரச ஈட்டு, முதலீட்டு வங்கியின் அதிகாரிகள் சிலரும் இதன் போது கலந்துகொண்டனர். 

Mon, 11/29/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை