முடக்கநிலையை கைவிட நியூசிலாந்து புதிய உத்தி

புதிய கொரோனா கட்டுப்பாட்டு மூலோபாயத்தை செயற்படுத்தவிருக்கும் நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய நகரான ஒக்லாந்தில் மூன்றரை மாதங்களாக அமுலில் இருக்கும் பொது முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவரவுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி பி.ப. 11.59க்கு புதிய கொரோனா நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டன் தெரிவித்தார். இதன்படி கொரோனா தொற்றை முற்றாக ஒழிக்கும் திட்டத்திற்கு பதில் வேகமாகப் பரவக்கூடிய டெல்டா வைரஸ் திரிபை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

“டெல்டா இங்கு இருப்பதோடு அது விலகிச் செல்லாது என்பதே கடிமான உண்மையாகும்” என்று அவர் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

நியூசிலாந்து இதுவரை கடுமையான முடக்கநிலை, தொடர்புகளை கண்டறிதல் மற்றும் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா தொற்றை முழுமையாக இல்லாமல் செய்யும் மூலோபாயத்தையே பின்பற்றி வந்தது.

இதன் மூலம் நாட்டில் இதுவரை நோய்த் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 க்கு மட்டுப்படுத்த முடிந்துள்ளது.

Tue, 11/23/2021 - 11:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை