பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி சுப்பர்சொனிக் புல்லட்ஸ் அணி வெற்றி

அட்டாளைச்சேனை சுப்பர்சொனிக் விளையாட்டுக் கழகம் நடாத்திய 'சுப்பர்சொனிக்பிரிமியர் லீக்-2021' கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சுப்பர்சொனிக்புல்லட்ஸ் அணியினர் வெற்றியீட்டி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டனர்.

அட்டாளைச்சேனை சுப்பர்சொனிக் விளையாட்டுக் கழக கிரிக்கெட் வீரர்கள் சுப்பர்சொனிக் ஸ்பாட்டன், சுப்பர்சொனிக் புல்லட்ஸ், சுப்பர்சொனிக் சலன்ஜர்ஸ் ஆகிய பெயர்களில் மூன்று அணியினராகப் பிரிக்கப்பட்டு இச்சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை சுப்பர்சொனிக் விளையாட்டுக் கழகத் தலைவர் எம்.ஐ.எம்.அஷ்ரஃப் தலைமையில், அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொதுவிளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சுப்பர்சொனிக்ஸ்பாட்டன், சுப்பர்சொனிக் புல்லட்ஸ் அணியினர் மோதிக் கொண்டனர்.முதலில் துடுப்பாடிய சுப்பர்சொனிக் புல்லட்ஸ் அணியினர் 07 ஓவர்பந்துவீச்சு முடிவில் 10 விக்கட்டுக்களை இழந்து மொத்தம் 59 ஓட்டங்களைப்பெற்றுக் கொண்டனர். பதிலுக்குத் துடுப்பாடிய சுப்பர்சொனிக் ஸ்பாட்டன்அணியினர் 07 ஓவர்கள் முடிவில் 54 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டனர்.

போட்டி ஆட்ட நாயகனாக சுப்பர்சொனிக் புல்லட்ஸ் அணியைச்சேர்ந்த ஏ.எம்.றிப்கி அஹமட் மற்றும் சுற்றுப் போட்டித்தொடர் ஆட்ட நாயகனாக அதேஅணியைச் சேர்ந்த ஏ.எம்.றிகாப் அஹமட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை கௌரவ அதிதியாகவும், அனுசரணையாளர்களான சுப்பர்சொனிக் கழக ஆலோசகர் ஐ.எல்.ஹாறூன், சரமல் அரிசிஆலை முகாமைத்துவப் பணிப்பாளர் ஐ.எல்.சஹீல், சிபாரா நகைமாளிகை முகாமைத்துவப் பணிப்பாளர் ஜே.எம்.சுபியான், ஹலீம் ஹாட்வெயார் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.ஹலீம் ஆகியோர் விஷேட அதிதியாகவும்கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணம் மற்றும் பரிசில்களை வழங்கி வைத்தனர். சுப்பர்சொனிக் விளையாட்டுக்கழக நிர்வாகிகள், கழக வீர்ரகள், கிரிக்கெட் இரசிகர்கள் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை மத்திய நிருபர்

Wed, 11/03/2021 - 06:00


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை