சீரற்ற காலநிலையால் மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிப்பு

சீரற்ற காலநிலையால் மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிப்பு-Inclement Weather-Fishermen Affected

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால், இம்மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடல் பகுதியில் வீசி வரும் கடும் காற்றினால் மூன்றாவது நாளாகவும் அதிகளவான மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை கைவிட்டுள்ளனர்.

மன்னார் தீவக பகுதிகளை சூழ்ந்த கடல் பரப்பின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாலும், கடல் பகுதியில் அதிக காற்று வீசுவதாலும் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அதே நேரம் உள்ளூர் மீனவர்களுடைய படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளதாக வும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் குறூப் நிருபர்

Sat, 11/13/2021 - 09:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை