ஓமானில் நடைபெறவுள்ள புதிய லெஜண்ட்ஸ் தொடர்

சர்வதேச கிரிக்கெட்டில் பிரகாசித்த முன்னாள் வீரர்கள் விளையாடும் புதிய லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஓமானில் நடைபெறவுள்ளது.

இலங்கை, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் முதல் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடியிருந்தனர்.

மேற்குறித்த நாடுகளை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கி, மூன்று அணிகள் உருவாக்கப்படவுள்ளன. இதில், இந்தியா, ஆசியா மற்றும் உலக கிரிக்கெட் பதினொருவர் என்ற மூன்று அணிகள் விளையாடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு, பதவிக்காலம் நிறைவுக்கு வந்துள்ள ரவி சாஸ்திரி இந்த தொடருக்கான ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த புதிய லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடர் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதுடன், போட்டிகள் அனைத்தும் அல் அமெரட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sat, 11/27/2021 - 06:00


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை