வீதியில் பயணித்தவருக்கு எமனான தென்னை மரம்

வெட்டப்பட்ட மரம் வீழ்ந்து பலி

வெட்டப்பட்ட தென்னை மரமொன்று வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றின் மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அனுராதபுரம், நரியன்குளம சந்தி, மிஹிந்தலை வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் மின் இணைப்பு கம்பிகளுக்கு ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற நபர் ஆகியோர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பின்னால் அமர்ந்து சென்ற நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

71 வயதுடைய பஹலகம, உஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் 18 மற்றும் 30 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Fri, 11/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை