புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக எல்.எம்.டி. தர்மசேன; ஓய்வு பெறுகிறார் சனத் பூஜித

புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக எல்.எம்.டி. தர்மசேன; ஓய்வு பெறுகிறார் சனத் பூஜித-LMD Dharmasena-Appointed as Commissioner General of Examinations

புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக, எல்.எம்.டி. தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி அமைச்சின் பாடசாலை பிரிவுக்கான மேலதிக செயலாளராக தர்மசேன கடமையாற்றி வருகிறார்.

இதேவேளை, குறித்த பதவியில் பணியாற்றிய பீ. சனத் பூஜித இன்று (26) ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து குறித்த நியமனம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சனத் பூஜித கடந்த 2017 ஆண்டு நவம்பர் மாதம், பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்தார்.

அதற்கமைய, எதிர்வரும் புதன்கிழமை (29) முதல் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக எல்.எம்.டி. தர்மசேன தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி நிர்வாக சேவையில் விசேட தரத்திலுள்ள அதிகாரியான எல். எம். டி. தர்மசேன பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலைப் பரீட்சைகள், கணனிகள் மற்றும் விசாரணைக் கிளைகளில் பரீட்சைகள் ஆணையாளராக 9 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

அவர் கொழும்பு ஆனந்தா கல்லூரி மற்றும் கொழும்பு மஹாநாம கல்லூரியின் அதிபராகவும் பணியாற்றியுள்ளார். கல்வி அமைச்சின் விஞ்ஞான பீடத்தின் ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ள தர்மசேன பின்னர் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இளங்கலை விஞ்ஞான பட்டம் பெற்ற எல்.எம்.டி. தர்மசேன மத்துகம ஆனந்தா கல்லூரி, லுணுகல மத்திய கல்லூரி மற்றும் பதுளை மத்திய கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலைக் கல்வியைப் பெற்றார்.

அவரது நியமனத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 11/26/2021 - 11:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை