முகக்கவசம் அணிந்து முன்மாதிரியாக நடக்கவும்

எதிரணி எம்.பிக்களுக்கு பிரசன்ன அறிவுரை

எதிரணி எம்.பிக்கள் முகக்கவசம் இல்லாமல் சபைக்குள் வருகின்றனர். மனோ கணேசனுக்கு கொரோனா தொற்றியிருப்பதால் ஏனைய எதிரணி எம்.பிக்களுக்கும் தொற்ற வாய்ப்புள்ளது. எனவே எதிரணி எம்.பிக்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்த வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்த அவர், சஜித் அணியின் ஆர்ப்பாட்டத்தால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்றார்.

இதனையடுத்து எதிரணி எம்.பிக்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ராஜகருணா எம்.பி (ஐ.ம.ச)

அநுராதபுரத்தில் நடந்த பிறந்த நாள் நிகழ்வில் 02 ஆயிரத்திற்கு மேல் பங்கேற்றனர் என்றார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீண்டும் கருத்துத் தெரிவித்ததோடு எதிரணி குழம்புவதற்காக எதுவும் சொல்லவில்லை. முகக் கவசம் அணியுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மனோ கணேசன் எம்.பிக்கும் கொரோனா தொற்றியுள்ளது. இவர்களுக்கும் தொற்ற வாய்ப்புள்ளது.எமது பாதுகாப்பிற்காகவே கோருகிறோம்.எனவே இவர்களுக்கு பீசீஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்றார். முஜீபுர் ரஹ்மான் எம்.பி (ஐ.ம.ச),..

ஆர்ப்பாட்டம் நடத்தினால் கோவிட்19 வந்தால் பிறந்தநாள் கொண்டாடினால் கோவிட்19 வராதா? என்று கேள்வி எழுப்பினார். பிரதி சபாநாயகர் கருத்துத் தெரிவிக்கையில்.

சபையில் இருக்கையிலாவது முகக் கவசம் அணிந்து இருப்பது முக்கியமானது.அது நாட்டு மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கும்.

ஷம்ஸ் பாஹிம்

Sat, 11/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை