உலகளவில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

உலகளவில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தெரியவருகிறது. உலக சந்தையில் (18) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,863 அமெரிக்க டொலராக காணப்பட்டது.

இது விரைவில் 1,900 அமெரிக்க டொலர்வரை அதிகரிக்குமென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகளவில் பொருளாதாரம் முடங்கிப்போயுள்ள இச் சந்தர்ப்பத்தில், உலக சந்தையில் தங்கம் மற்றும் மசகு எண்ணெய் போன்றவற்றின் விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை குறிக்கப்படுகிறது. ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு பவுன் ஆகும்.

இது 24 கரட் தங்கமாகும்.

 

Sat, 11/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை