அமெரிக்காவில் சர்வதேச பயண கட்டுப்பாடு தளர்வு

அமெரிக்கா, அதன் சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை நேற்று திங்கட்கிழமை தொடக்கம் தளர்த்தியுள்ளது.

சுற்றுப்பயணத்துக்கும், அத்தியவசியமற்ற பயணங்களுக்கும் 30க்கு மேற்பட்ட நாடுகளின் பயணிகளுக்கு அது அனுமதி வழங்கவுள்ளது. ஐரோப்பா, பிரிட்டன், சீன போன்றவை அவற்றில் அடங்கும்.

ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக பயணக் கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ளன. தகுதிபெறும் நாடுகளில் இருந்து, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும்.

தடுப்பூசி, உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலைப் பெற்றதாக இருக்கவேண்டும். பயணிகள், தங்கள் பயணத்துக்கு 72 மணிநேரத்துக்கு முன்னதாகக் வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

அத்தகைய நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வோர், அமெரிக்காவுக்குள் நுழைந்ததும் தனிமைப்படுத்திக்கொள்ள தேவை இருக்காது.

சர்வதேச பயணிகள் அமெரிக்காவுக்குள் மீண்டும் அனுமதிக்கப்படுவது அந்நாட்டின் சுற்றுப்பயணத் துறைக்குப் பெரிதும் உதவும் என நம்பப்படுகிறது.

Tue, 11/09/2021 - 07:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை