கடுகண்ணாவை பகுதியில் நிலச்சரிவு அபாயம்

கடுகண்ணாவை பகுதியில் நிலச்சரிவு அபாயம்-Kadugannawa Landslide Warning

அதிக மழை காரணமாக கீழ் கடுகண்ணாவை பகுதியின் ஒரு பகுதி ஸ்திரமற்றதாக மாறியுள்ளதுடன் அதில் பல விரிசல்களில் நீர் பாய்ந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் கற்பாறையினை துளைத்த பகுதிக்கு அருகாமையில் உள்ள ஒரு இடத்திற்கு விஜயம் செய்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மலை உச்சியில் இருந்து நீர் ஓடை ஒன்று விரிசலுடன் இறங்கியதாகவும், முதலில் விரிசல்களை மூட வேண்டுவதுடன் பூமியின் உள்பகுதியில் புகுந்த நீரை இணை குழாய் அமைப்பை பயன்படுத்தி வெளியே எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கடுகண்ணாவை பகுதியில் நிலச்சரிவு அபாயம்-Kadugannawa Landslide Warning

மேலும் நிலச்சரிவுகளைத் தடுக்க பொறியியல் முறைகளைப் பயன்படுத்தி நீண்டகால வேலைத்திட்டத்தை செயல்படுத்துகிறது மற்றும் கள ஆய்வு மூலம் பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி சுமார் ஒரு வாரத்தில் அறிக்கை தயாரிக்கப்படும்.எனவும் மேலும் மழை பெய்தால் இந்த பகுதியில் மண்சரிவு அபாயம் அதிகரிக்கலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

மழை நின்றால் ஒரு வழிப்பாதை மட்டும் திறக்கப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்படும மேலும் மலைப்பாங்கான பகுதியை கவனமாக ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிக்கு மேல் கொழும்பு - கண்டி புகையிரத பாதை அமைந்துள்ளதால், நிலைமை காரணமாக கண்டியில் இருந்து ரம்புக்கனை வரை புகையிரதங்கள் எதையும் இயக்க வேண்டாம் என ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் பேரில் பகுதியை நிலைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

மேலும், அப்பகுதியில் உள்ள பழக்கடைகளை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மண்சரிவு அபாயம் உள்ளதால் மலைப்பகுதிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கொழும்பு மற்றும் கண்டி நகரங்களில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்பை குறைக்கும் வகையில் ஒரு பாதையாவது விரைவில் திறக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(எம்.ஏ.அமீனுல்லா )

Sat, 11/13/2021 - 11:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை