விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்

20 ஓவர் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தற்போது 7-வது இடத்தில் உள்ளார். 20 ஓவர் உலக கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர்அசாம் 34 பந்தில் 39 ஓட்டங்கள் எடுத்தார்.

இதில் 32-வது ஓட்டங்களை தொட்டபோது அவர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் 2,500 ஓட்டங்களை எடுத்தார். 62 இன்னிங்சில் அவர் இந்த ஓட்டங்களை தொட்டார். இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார். விராட் கோலி 68 இன்னிங்சில் 2,500 ஓட்டங்களை தொட்டிருந்தார். தற்போது இந்த ஓட்டங்களை தொட்ட அதிவேக வீரர் என்ற சாதனையில் பாபர் ஆசம் உள்ளார்.

பாபர் ஆசம் 62 இன்னிங்சில் 2,507 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சராசரி 48.21 ஆகும். ஒரு சதமும், 24 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 122 ஓட்டங்கள் குவித்துள்ளார். 20 ஓவர் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களில் அவர் தற்போது 7-வது இடத்தில் உள்ளார். கோலி 3,227 ஓட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். பாபர் ஆசம் இந்த உலக கிண்ணத்தில் 300-க்கு மேற்பட்ட ஓட்டங்களை தொட்டுள்ளார்.

இதன் மூலம் ஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களில் 3-வது இடத்தை பிடித்தார். அவர் 6 ஆட்டத்தில் 4 அரை சதத்துடன் 303 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சராசரி 60.60 ஆகும். ஸ்டிரைக் ரேட் 126.25 ஆகும். விராட் கோலி 2014 உலக கிண்ணத்தில் 319 ஓட்டங்களும், 2016 உலக கிண்ணத்தில் 317 ஓட்டங்களும் எடுத்தார்.

பாபர் ஆசம் தனது முதல் உலக கிண்ணத்திலேயே அதிக ஓட்டங்கள் எடுத்து மெத்யூ ஹைடன் (அவுஸ்திரேலியா) சாதனையை முறியடித்தார். மெத்யூ ஹைடன் 2007 அறிமுக உலக கிண்ணத்தில் 265 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

Sat, 11/13/2021 - 08:42


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை