இஸ்ரேல் உளவு மென்பொருள் நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு

ஊடுருவல் கருவி ஒன்றினால் ஐபோன் பயனர்களை இலக்கு வைத்த குற்றச்சாட்டில் இஸ்ரேலிய உளவுநிரல் நிறுவனமான என்.எஸ்.ஓ குழுமம் மற்றும் அதன் தாய் நிறுவனத்தின் மீது ஆப்பிள் நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது.

என்.எஸ்.ஓவின் பெகசுஸ் என்ற மென்பொருள் ஐபோன் மற்றும் அன்ட்ரொயிட் சாதனங்களை பாதிக்கக் கூடியதாக இருப்பதோடு, அதில் இருக்கும் செய்திகள், படங்கள் மற்றும் மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்பு பதிவுகளை பிரித்தெடுக்கவும் ஒலிவாங்கிகள் மற்றும் கெமராக்களை இரகசியமாக செயற்படுத்தவும் அனுமதிக்கிறது.

எனினும் தமது கருவி பயங்கரவாதிகள் மற்றும் குற்றவாளிகளை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டது என்று என்.எஸ்.ஓ குழுமம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இதனை செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

“ஆப்பிள் பயனர்களை இலக்கு வைத்தது மற்றும் கண்காணித்ததற்கு என்.எஸ்.ஓ குழுமம் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஓ.எஸ்.வை. டெக்னோலஜிஸ் பொறுப்புக் கூற வேண்டும்” என்று ஆப்பிள் குறிப்பிட்டுள்ளது.

கலிபோர்னியாவின் வடக்கு மாவட்டத்திற்கான மாவட்ட நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் தனது முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளது.

Thu, 11/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை