யாழ், இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நவீன வசதிகளுடன் 55 மில்லியன் ரூபா செலவில் இந்த மைதானம் அமைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய மாணவர்கள் இதற்கான நிதியுதவியை வழங்கினர்.

இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் ரட்ணம் செந்தில் மாறன், கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ்,யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன், செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன், பழைய மாணவர் சங்கங்களின் தலைவர்கள், நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இலத்திரனியல் ஸ்கோர்போட் , கழக மனை , பயிற்சிகளுக்கான இடம் போன்றன இந்த திடலில் உள்ளமை விசேட அம்சமாகும்

இந்த விளையாட்டு மைதானம் வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளிலே மிகவும் நவீனகரமான மைதானமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மைதானத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி மோதும் 19 வயதிற்குட்பட்டோருக்கான 30 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றும் இடம்பெறவுள்ளது.

Sat, 11/13/2021 - 15:40


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை