அமெரிக்காவில் தனியார் துறை ஊழியருக்கு தடுப்பூசி கட்டாயம்

அமெரிக்கா, தனியார் துறையில் பணியாற்றும் மில்லியன் கணக்கான ஊழியர்கள் ஜனவரி 4ஆம் திகதிக்குள் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது கட்டாயம் என்று காலக்கெடு விதித்துள்ளது.

குறைந்தது சுமார் 100 ஊழியர்களைக் கொண்ட அமெரிக்க நிறுவனங்களுக்குப் புதிய விதி பொருந்தும்.

நாட்டின் ஊழியரணியில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் அத்தகைய நிறுவனங்களில் வேலை செய்கின்றனர்.

தனியார் துறை ஊழியர்களுக்கான தடுப்பூசித் திட்டம் பற்றி, ஜனாதிபதி ஜோ பைடன் செப்டம்பரில் அறிவித்தார்.

ஜனவரி நான்காம் திகதிக்குள் தனியார் துறை ஊழியர்கள் இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் அல்லது அவர்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும், வாரந்தோறும் வைரஸ் தொற்றுப் பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும்.

Sun, 11/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை