அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் புதிய தூதுவர் அறிவிப்பு

அசாம் ஜம்மு மற்றும் காஷ்மிர் தலைவர் மற்றும் முன்னாள் தூதுவரான சர்தார் மசூத் கான் அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் புதிய தூதுவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த பணிக்காக இஸ்லாமாபாத் திரும்பும் தற்போதைய தூதுவர் அசாத் மஜீத் கானுக்கு பதிலாகவே மசூத் கான் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான ஒப்புதலை பெறும் ஆவணத்தை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு தூதரகம் வழங்கியுள்ளது. இந்த உடன்படிக்கையானது இராஜாங்க திணைக்களம் தூதரக உறுப்பினர்களுக்கான வசதிகளை வழங்குவதற்கான முறையாகும்.

இந்த ஒப்புதல் செயற்பாட்டுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஒரு மாத காலம் வரை எடுத்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

மசூத் கான் 2021 ஓகஸ்ட் வரை அசாத் ஜம்மு மற்றும் காஷ்மிரின் தலைவராக இருந்தவராவார்.

அவர் ஐக்கிய நாடுகளுக்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி மற்றும் சீனாவுக்கான பாகிஸ்தான் தூதுவர் உட்பட முக்கிய இராஜதந்திர பணிகளில் ஈடுபட்டவராவார்.

Thu, 11/25/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை