சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு

கடந்த வாரத்தில் மட்டும் 9,000 பேர் வருகை

 கடந்த வாரம் நாட்டிற்கு 9,545 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தந்ததாக சுற்றுலாத்துறை அமைச்சரான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மேற்படி வருகை தந்த சுற்றுலாப்பயணிகள் 3,107 பேர் இந்தியாவிலிருந்தும், 774 பேர் ரஷ்யாவிலிருந்தும், 764 பேர் பிரிட்டனிலிருந்தும் வருகை தந்துள்ளனர். இதேவேளை, ஜெர்மன், பாகிஸ்தான், மாலைதீவு, பிரான்ஸ், கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்தில் இருந்து பெருமளவான சுற்றுலாப்பயணிகள் கடந்த வாரம் வருகைத் தந்துள்ளனர்.

நாடு மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டிற்கு வருகைத் தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நாடு தடையின்றி இயங்கினால், அடுத்தாண்டு இறுதிக்குள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சுற்றுலாத்துறையினால் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

Thu, 11/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை