பில் கேட்ஸுடன் பிரதமர் மோடி சந்திப்பு

கிளாஸ்கோவில் இந்திய பிரதமர் மோடி, மைக்ரோசொப்ட் இணை- நிறுவனர் பில் கேட்ஸை சந்தித்து உரையாடினார்.

இங்கிலாந்தில் அதிக மக்கள் தொகை கொண்ட 4-வது நகரும், ஸ்கொட்லாந்தின் துறைமுக நகருமான கிளாஸ்கோவில் ஐ.நா. பருவநிலை மாற்ற உச்சி மாநாடு கடந்த வாரம் நடைபெற்றது.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் நேரில் கலந்து கொண்டு காலநிலை மாற்றம் தொடர்பாக உரையாற்றினார்கள்.

இந்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ உட்பட இந்திய பிரதமர் மோடியும் நேரில் பங்கேற்றார்.

இந்த மாநாடு உலகத் தலைவர்களை சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த வகையில் உலக பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசொப்ட் இணை- நிறுவனருமான பில்கேட்ஸை சந்தித்து பிரதமர் மோடி உரையாடினார். அப்போது நிலையான வளர்ச்சிக்கான வழிகள் மற்றும் பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து உரையாடினர்.

Sat, 11/06/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை