அக்கரைப்பற்றில் புத்தக கண்காட்சி

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு 2021ஆம் ஆண்டுக்கான புத்தக கண்காட்சி நாளை  05ம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை அக்கரைப்பற்று  Aims சர்வதேச பாடசாலையில் நடைபெறவுள்ளதாக, புத்தக கண்காட்சி ஏற்பாட்டாளரும்,  எழுத்தாளருமான சிறாஜ் மசூர் தெரிவித்தார்.

இக் கண்காட்சி நாளை  05ம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை காலை 09.00மணி தொடக்கம் இரவு 10.00வரை இக் கண்காட்சியை பார்வை இடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இப் புத்தக கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வுக்கு இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

(ஒலுவில் விசேட நிருபர்) 

 

Thu, 11/04/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை