அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று பேருவளை விஜயம்

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று சனிக்கிழமை (13) பேருவளைக்கு விஜயம் செய்கிறார்.

சீனன்கோட்டை இரத்தினக்கல் ஆபரண வர்த்தக சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மர்ஜான் பளீலின் அழைப்பில் விஜயம் செய்யும் அமைச்சர், சீனன்கோட்டை இரத்தினக்கல் ஆபரண வர்த்தக சங்கத்தின் பத்தை காரியாலயத்தில் இன்று மு.ப. 10.30 மணிக்கு இடம்பெறவுள்ள சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பார். இதன்போது 'மாணிக்கக்கல் சூடேற்றும்' பயிற்சி நெறியில் கற்கை நெறியை பூர்த்தி செய்த சுமார் 50 மாணவர்கள் அமைச்சரினால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

அதேவேளை, இன்று முற்பகல் 11.30 மணியளவில் சீனன்கோட்டை பாஸிய்யா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்னால் அமைந்துள்ள 'சீனன்கோட்டை ஜெம் டவர்' கட்டடத்தில் புதிதாக அமையவுள்ள இரத்தினக்கல் வர்த்தக சங்கத்தின் சீனன்கோட்டை காரியாலயத்தையும் அமைச்சர் லொஹான் ரத்வத்த திறந்து வைக்கவுள்ளார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல், தேசிய இரத்தினக்கல் ஆபரண வர்த்தக சங்கத் தலைவர் திலக் வீரசிங்க , சீனன்கோட்டை பள்ளிச்சங்க நிர்வாக சபை உறுப்பினர்கள் உட்பட ஊர் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக சங்க செயலாளர் லியாகத் ரஸ்வி தெரிவித்தார்.

அஜ்வாத் பாஸி

Sat, 11/13/2021 - 10:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை