தர்மலிங்கத்தின் தூக்கை நிறுத்துவதற்கு அழுத்தம்

சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள நாகேந்திரன் தர்மலிங்கம் மீதான தண்டனையை நிறுத்தும்படி ஐந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர்் போதைக் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றங்காணப்பட்ட தர்மலிங்கம் கற்றல் குறைபாடு கொண்டவர் என்று கூறப்பட்டுள்ளது.

33 வயதான தர்மலிங்கம் 2010 ஆம் ஆண்டு 42.72 கிராம் போதைப் பொருளை எல்லை தாண்டி கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டு தண்டை விதிக்கப்பட்டார். அவர் மீதான தூக்குத் தண்டனை கடைசி நீரே மேன்முறையீட்டில் ஒத்தி வைக்கப்பட்டது.

அவரது நுண்ணறிவு, தகவலறிந்து முடிவுகளை எடுக்கும் திறனை பாதிக்கும் அளவு குறைவாக உள்ளது என்று வாதிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அவரது வழக்கை நேற்று எடுத்துக்கொண்ட நிலையில், தர்மலிங்கத்திற்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த வழங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிகத் தீவிர குற்றங்களுக்கு மாத்திரம் சிங்கப்பூரில் அமுல்படுத்தப்பட்டு வரும் மரண தண்டனையை நிறுத்தும்படி ஐ.நா நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Wed, 11/10/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை