தாய்வானுக்கு இராணுவ உதவியை அதிகரிக்க அமெரிக்காவில் சட்டம்

தாய்வானுக்கு இராணுவ உதவியை அதிகரிக்க வகைசெய்யும் சட்டமூலத்தை, அமெரிக்க பாராளுமன்றத்தின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்.

அது, சீனாவுக்குச் சினமூட்டக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்வானியப் பாதுகாப்புச் சட்டம் எனப்படும் சட்டமூலம், 2032ஆம் ஆண்டுவரை வருடந்தோறும் தாய்வானுக்கு இரண்டு பில்லியன் டொலர் நிதியளிக்க வகை செய்யும். அதன்மூலம், தாய்வான் ஆயுதக் கொள்முதல் செய்யலாம், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தற்காப்புச் சாதனங்களை வாங்கலாம்.

ஆனால், அந்த நிதியைப் பெற சில நிபந்தனைகள் உள்ளது. அமெரிக்கா வழங்கும் அதே அளவு நிதியைத், தாய்வானும் கொடுக்க வேண்டும். ஆற்றலை மேம்படுத்துவதற்கு இரு தரப்பும் நீண்ட காலத் திட்டத்தைக் கூட்டாகச் செயல்படுத்த வேண்டும்.

இரு தரப்பு இராணுவப் பரிமாற்றம், தாய்வான் இராணுவ அதிகாரிகள் அமெரிக்காவில் பயிற்சி பெறுவது ஆகியவற்றுக்கும் அந்த சட்டமூலம் வாய்ப்பளிக்கும்.

 

Sat, 11/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை